கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்கு எச்சரிக்கை முறை.. புதிதாக வெளியிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் பிரதமர், 3 அடுக்கு எச்சரிக்கை முறையை இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் அதிபர் வரை யாரென பாராமல் கொரோனா பரவும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், பிரிட்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 13,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்கமுடியாதது என கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு பிரதமர் கூறினார்.
3 அடுக்கு எச்சரிக்கை முறை:
இந்தநிலையில், கொரோனா பரவலை தடுக்க, நடுத்தரம் (medium), உயர் (high) மற்றும் மிக உயர்ந்த (very high) என 3 அடுக்கு எச்சரிக்கை முறையை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார். இந்த விதிகள், நோய்த்தொற்று விகிதங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
Medium:
நடுத்தர நிலை (medium), இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். இந்த எச்சரிக்கை முறையில் 10 மருத்துவ குழுக்கள் தாயாராக உள்ளதாகவும், இந்த நடுத்தர கட்டுப்பாட்டில் பெரும்பாலான பகுதிகள் அடங்கும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
High:
உயர் நிலை (high), இந்த நிலை, தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கும். இதில் 144 தடை உத்தரவு போல தெருவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களை தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க உதவுகிறது.
Very High:
மிக உயர்ந்த நிலை (Very High) என்பது, நோய் தொற்று அதிகளவில் இருக்கும் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் தேசிய சுகாதார சேவை (NHS) எல்லா இடங்களிலும் இருப்பார்கள். பார்கள், பப்கள் போன்ற இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
ஒரு வீட்டில் வசிப்பவர், மற்ற வீடுகளுடன் பழகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில்லறை கடைகள் மற்றும் கல்வி தொடர்பான இடங்கள் செயல்பட அனுமதி விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025