பிரிட்டனுக்கு நகரும் வெளிநாட்டவர்கள்…. ரிஷி சுனக்கின் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்.!
சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின் நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார்.
அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும் நிகர இடம்பெயர்வை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வரலாற்றில் இதற்கு முன் எந்தப் பிரதமரும் இதைச் செய்ததில்லை.’ என்று ரிஷி சுனக் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை இங்கே காணலாம்…
சார்பு விசா :
அதிக எண்ணிக்கையிலான சார்புடையவர்கள் (இங்கிலாந்தில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் மூலமாக நாட்டிற்குள் வருபவர்கள் ) இங்கிலாந்திற்குள் நுழைவதை தடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இடம்பெயர்வதைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.’
சம்பள வரம்பு அதிகரிப்பு :
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வருமான வரம்பு கிட்டத்தட்ட 50% அதிகரிக்கபடுகிறது. 26,200 இங்கிலாந்து பவுண்ட்டிலிருந்து 38,700 பவுண்டாக அதிகரிக்க பட்டுள்ளது. இதன் மூலம் குறைவான சம்பளத்திற்கு வெளிநாட்டில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நடைமுறை குறைக்கப்படும்.
உடல்நலம் மற்றும் பராமரிப்பு விசா :
உடல்நலம் மற்றும் பராமரிப்பு விசா (கணவர் வேலை பார்ப்பார் மனைவி அல்லது குடும்பத்தார் இங்கிலாந்தில் அவர் மூலமாக இங்கிலாந்து வருவர்), முன்பு பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இனி இங்கிலாந்திற்குள் அவ்வாறு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டாலும் அதற்கான நடைமுறை மிக கடுமையாக இருக்கும்.
மாணவர்களுக்கான விசா :
UK க்கு மாணவர்களின் வரவை சமாளிப்பதற்கான ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. இந்த நடவடிக்கைகள் நிகர இடம்பெயர்வை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, செப்டம்பர் 2023 இல் முடிவடையும் ஆண்டில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் வந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1,53,000 என தகவல் வெளியாகியுள்ளது.