கொரோனா நெருக்கடியால் 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து விமான நிறுவனம்!
கொரோனா ஊரடங்கு நெருக்கடியால் 12 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து விமான நிறுவனம்.
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும், இதில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையின் காரணமாக விமானிகள் உட்பட தங்களது ஊழியர்களில் பன்னிரண்டாயிரம் பெற ஆட்குறைப்பு செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்து அவர்களை தற்போது வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொழிற்சங்கங்கள் இதுகுறித்து ஆவேசம் அடைந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர். இதற்கிடையே பிரிட்டிஷ் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கும் ஆட்குறைப்பு செய்ய பரிசீலுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.