கார்த்தி குரல் போற்றத்தக்கது- உதயநிதி ஸ்டாலின் ட்விட் .!
நடிகர் கார்த்தியின் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல”மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு (Environmental Impact Assessment – EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது என்று அறிக்கையில் கார்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் “விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டி ருக்கும் நண்பர் கார்த்தி அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும் என்று பதிலளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து திரையுலகிலிருந்து வெளிப்பட்டிருக்கும் நண்பர் @Karthi_Offl அவர்களின் குரல் போற்றத்தக்கது. உழவன் அமைப்பு மூலம் நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு சமூக அக்கறைக்கான உங்கள் குரல் இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும்
— Udhay (@Udhaystalin) July 29, 2020