உடலை சீராக இயக்கும் சீரகத்தின் மருத்துவ குணங்கள்…!!!
சீரகத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். சீரகம் நமது சமையல் அறைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்று தான். இது நமது உடல் நிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம்.
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். இது இரத்த விருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும்.ரத்த மூலம், வயிறு வலி, இருமல், விக்கல் நீங்கும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.