உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சீத்தாப்பழத்தின் சிறப்பு தன்மைகள்….!!!
சீத்தாப்பழம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பழம் தான். ஆனால் அதிகமாக இதை விரும்பிசாப்பிட மாட்டார்கள். ஏனென்றால் இதில் நன்கு பழுத்த பழங்கள் கொஞ்சம் சிதைந்த நிலையில் இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த பழத்தில் உடலுக்கு நலம்தரும் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இதில் உள்ள சத்துக்கள் மலச்சிக்கலை நீக்குகிறது. முகத்தில் பருக்கள் உருவாகாமல் இருக்க உதவுகிறது. தலை முடிக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. குளிர்காச்சலை போக்குகிறது. இதயத்தை பலப்படுத்துகிறது.