முண்ணனி நிறுவனமான UBER நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் காரணமாக பொருளாதார தாக்கம் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சியமற்ற சூழல் ஆகியவற்றின் காரணமாக உபர் நிறுவனம் அதன் இயக்க செலவுகளை குறைக்க சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 14 சதவீதத்தினர் ஆவர்.
இவர்களை 3 நிமிட ஜீம் வீடியோ கால் மூலமாக UBER தலைமையகத்தில் இருந்து ” இன்று உபருடன் உங்கள் கடைசி வேலை நாளாக இருக்கும் என குறிப்பிட்டு 3700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . இதுகுறித்து உபர் தலைமையகத்தின் பீனிக்ஸ் மையத்தின் தலைவர் ராஃபின் சாவேலியோ வீடியோ காலில் பேசுகையில் , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உபரின் சவாரி வணிகம் பாதிக்கு மேலாக குறைந்துவிட்டது. மேலும், கடினமான மற்றும் துரதிர்ஷ்ட்டவசமான உண்மை என்னவென்றால் எங்கள் ஊழியர்களுக்கு போதுமான வேலை இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் நிறுவனத்தின் இ-பைக்குகள், இ-ஸ்கூட்டர்கள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…