UBER நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் மோதி பெண் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் !
உபேர் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத கார் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சாலையைக் கடந்த பெண் மீது மோதி உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உபேர் நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களைச் சோதனை முறையில் இயக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அரிசோனாவில் டெம்ப் என்னும் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமணியளவில் ஓட்டுநர் இல்லாத உபேர் கார் திடீரெனச் சாலையைக் கடந்த பெண் மீது பலமாக மோதியது. இருட்டான பகுதியில் சாலையின் நடுப்பகுதியில் இருந்து திடீரென வந்ததால் அந்தப் பெண் மீது கார் மோதிவிட்டதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
எப்படிப் பார்த்தாலும் இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தானாக இயங்கும் கார் விபத்துக்குள்ளாகி முதன்முறையாக ஓர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்த சோதனைகளை நிறுத்தி வைப்பதாக டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.