உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்க வேண்டுமா?

Default Image
  • எல்லருக்குமே கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும்.
  • அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று அனைவருடைய ஆசை.
  • அதில் காதலின் பெற்றோர் முன்னால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே தெரிந்து கொள்ளுங்கள் இதோ கிளே.

எல்லருக்குமே வாழ்க்கையில் கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். முக்கியமான ஒன்றாக அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் அனைவருடைய ஆசையாக கருத்தை முன் வைக்கப்படுகிறது .ஆனால் அந்த காதல் திருமணம் எல்லாருக்கும் நடக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.பெரும்பாலும் காதல் திருமணம் தோல்வி அடைய காரணம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் போவதுதான்.

அனைத்து பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கைமுறையை அதாவது வாழ்கைதுணையை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசைப்படுவார்கள். அதனால்தான் தனது மகள் அல்லது மகன் காதலில் பற்றி தெரிய வந்ததும் முதலில் அஞ்சுகிறார்கள்.

பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால் அது அவர்கள் முன் அதிகமாக செல்போன் பயன்படுத்துவது. முக்கியமாக பெற்றோர்களுடன் உணவு உண்ணும் போது செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

இதில் ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் காதலியின் பெற்றோருடன் அதாவது உங்கள் மாமாவுடன் அமர்ந்து சாப்பிடும் திருப்பம் கிடைத்தால் இந்த தவறை ஒரு முறை கூட செய்துவிடாதீர்கள். இறகு ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஆனால் இது உங்கள் மீது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும்.

உங்கள் காதலியின் பெற்றோர்களை சந்திக்க செல்வதற்கு முன் அவர்களின் பிடித்ததை பற்றி ஒரு சிறிய விஷயத்தை தெரிந்து விட்டு செல்லுங்கள். அவர்களின் அம்மாவுக்கு சமையல் அல்லது தோட்ட கலையில் ஆர்வம் இருக்கலாம்,அவர்க்ளின் தந்தைக்கு கிரிக்கெட் அல்லது ஜிம் ஒர்க்வுட் ஆர்வம் இருக்கலாம். இது போன்ற விஷயங்களை அவர்களுடன் பேசும்போது இது தொடர்பான செய்திகளை அவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கும்.

முக்கியமாக உங்கள் காதலி மீது உங்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கலாம் அது உண்மைதான் ஆனால் அவர்களின் பெற்றோர்கள் முன் இருக்கும்போது அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் முன் காதலியை சீண்டுவது உங்கள் மீது அவர்களுக்கு ஒரு மோசமான உருவத்தை உருவாக்கும்.இதனால் இதெல்லாம் தவிர்ப்பது மிக நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்