சீனாவை தொடர்ந்து, இந்த வைரஸ் பல நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அணைத்து நாடுகளும் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால், 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த குழந்தைகளில், ஒன்று 9 மாத பெண் குழந்தை, இன்னொன்று 6 வயது பெண் குழந்தை. இருவரும் சகோதரிகள் தான். இந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில், அவர்களின் தாயும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை. இருந்தாலும் குழந்தைகளுக்காக அவரும் தனி வார்டில் இருந்தார்.
குழந்தைகளை பொறுத்தவரையில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் காணப்படும். எனவே, இந்த குழந்தைகளை மருத்துவர்கள் மிகவும் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 8 நாட்களில் அவர்கள் பூரணமாகக் குணம் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடத்திய மருத்துவ சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, 2 குழந்தைகளையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல டாக்டர்கள் அனுமதித்துள்ளனர். இந்த இரு குழந்தைகள் ,கொரோனா தொற்றில் இருந்து தப்பிய இளம் நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…