இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய இரண்டு வாரங்கள் தடை…! – பாகிஸ்தான் அரசு
வான்வழி, தரைவழியாக இந்தியாவிலிருந்து பாஸ்கிஸ்தானுக்கு பயணம் செய்ய இரண்டு வாரங்கள் தடை.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 1.50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து பயணம் செய்ய, பாஸ்கிஸ்தான் அரசு இரண்டு வாரங்கள் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் அமைச்சர் ஆசாத் உமர் கூறியதாவது, ‘கொரோனா தீவிரமாக பாதித்து வரும் சி பிரிவு நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது. எனவே வான்வழி, தரைவழியாக இந்தியாவிலிருந்து பாஸ்கிஸ்தானுக்கு பயணம் செய்ய இரண்டு வாரங்கள் தடை விதிக்கப்படுகிறது.’ என தெரிவித்துள்ளார்.