இந்தியானா பல்கலைக்கழக விருந்தில் கலந்துகொண்ட இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியானா மாநில பல்கலைக்கழக விருந்தில் கலந்துகொண்ட இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியானா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகாரிகள் பங்கேற்கக் கூடிய விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் கலந்துகொண்ட 18 வயதான பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளார். மேலும் அதே நாளில் இந்தியானா காவல்துறையை சேர்ந்த வாலண்டினா என்பவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த விருந்தில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கீன் ஷான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருமே உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து இவர்கள் தாக்கப்பட்ட நேரத்தில் அங்கு இருந்தவர்கள் விரட்டப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி அவர்கள் கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்தியானா மாநில பல்கலைகழகம், இந்த இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மாணவர்களிடம் இது குறித்து ஏதேனும் தெரியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.