நியூசிலாந்தில் மேலும் இருவருக்கு புதியதாக கொரோனா தொற்று!
கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த நியூசிலாந்தில் மேலும் இருவருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதிலும் சில நாடுகள் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பை மிகவும் எதிர்கொள்கின்றன. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நாடு நியூசிலாந்து தான்.
அங்கு இன்று புதிதாக இருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெளி இடங்களில் இருந்து வந்தவர்களாம். இதனால் அங்கு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.