நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கோவையை சேர்ந்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை பூர்ணா, தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரளாவில் கொச்சியில் வசித்து வரும் இவரிடம் நகைக்கடை அதிபர் என்று கூறி பண மோசடி செய்ய முயன்றதாக பூர்ணாவின் தாயார் போலீசில் சமீபத்தில் புகார் செய்திருந்தார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக கேரளாவை சேர்ந்த சரத், அஷ்ரப், ரபீக் மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் பூர்ணாவிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் பூர்ணா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் இதுவரை 10பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல மாடல் அழகிகளிடம், பெண்களிடம் சினிமா வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறி பணத்தையும், நகையையும் பறித்தது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி பலரை பாலக்காட்டில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் கோவையை சேர்ந்த நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் ஆகிய இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…