ஹாங்காங்கிற்கு செல்ல இரு விமானங்களுக்கு அக்டோபர் 30 வரை தடை.!
அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமானங்களில் ஹாங்காங்கிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
காரணம், விமானங்களில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து சர்வதேச பயணிகளும் ஹாங்காங் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங்கிற்கு செல்ல அரசாங்கம் தடைசெய்வது இது மூன்றாவது முறையாகும். முந்தைய தடைகள் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3 வரையிலும் இருந்தது.
இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை முதல் இருதரப்பு விமான ஒப்பந்தங்களின் படி சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.