ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் இரண்டு தனுஷ் படங்கள்..!!

ஓடிடியில் அடுத்தடுத்து இரண்டு தனுஷ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. வருகின்ற மே 14 ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது.
இதைபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் 17 மொழிகளில் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025