ஜப்பான் கடற்கரை அருகே அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்.!
ஜப்பானின் கடற்கரைக்கு அருகே இன்று 6.5 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, பிற்பகல் 2:45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து மாலை 3:07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.
யுஎஸ்ஜிஎஸ் படி, இரண்டு நிலநடுக்கங்களுலில் ஒன்று 23.8 கிமீ ஆழத்தில் தாக்கியது, இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியைச் சுற்றி 40 கிமீ தொலைவில் ஏற்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தென்மேற்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டது.
லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.!
கடந்த மே 5 அன்று, ஜப்பானின் மேற்கு மாகாணமான இஷிகாவாவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது, சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஹொக்கைடோவின் வடக்கு தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.