ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 12, அன்று, ரிக்டர் அளவுகோலில் 5.2 அளவுள்ள நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானைத் தாக்கியது.
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அதற்கு முன், கடந்த ஆண்டு அக்டோபரில், மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025