இரண்டு குழந்தை கொள்கை: சீனாவில் தாயின் பெயரை சுமக்கும் குழந்தைகள்!

Default Image

சீனாவில் தாயின் பெயரை சுமக்கும் குழந்தைகள்.

வாங் ரோங் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தபோது, ​​திருமணத்திற்கு முன்பே அவர் அளித்த வாக்குறுதியை அவள் கணவருக்கு நினைவுபடுத்தினாள். அதவாது, அவளுடைய குடும்பப் பெயரை அனுமதிக்க வேண்டும் என்பது தான் அந்த வாக்குறுதி.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள், எங்கள் குடும்பம் எங்களுடன் முடிவடைவதை நான் விரும்பவில்லை. ஒரு மகன் இல்லாததால் என் அப்பா ஏமாற்றமடைவதை நான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

நாட்டின் ஒரு குழந்தை ஆட்சி, 1979 முதல் 2016 வரை இயங்கியது. இகனையடுத்து, சீனாவில் இரண்டு குழந்தைகள் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், பெற்றோர்கள் தந்தையின் குடும்பப் பெயரை முதலில் பிறந்தவர்களுக்கும், தாயின் பெயரை இரண்டாவது குழந்தைக்கும் கொடுக்கிறார்கள்.

அதன்படி, 2018 ஆம் ஆண்டில் ஷாங்காயில் பிறந்த 10 குழந்தைகளில் ஒருவருக்கு அவர்களின் தாயின் குடும்பப்பெயர் இருந்ததாக நகர மக்கள் தொகை மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்