டிக்டாக் செயலியை வாங்கப்போவது யார் ..? ட்விட்டர், மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை..!
டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார்.
டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
சமீபத்தில், பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது ட்விட்டர் நிறுவனம் டிக்டாக்கினை வாங்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் டிக் டாக் மட்டுமல்லாமல் சீனாவை தலைமையிடமாக கொண்டுஇயங்கி வரும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீசாட் செயலுக்கும் தடைவிதிக்க டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என கூறப்படுகிறது.