பள்ளிகளை திறக்க கூறிய டொனால்டு ட்ரம்ப்க்கு சரியான பதிலடி கொடுத்துள்ள ட்விட்டர் வாசிகள்!
மீண்டும் பள்ளிகளை திறக்குமாறு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபரிடம் முதலில் உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள் என பதிலளிக்கும் ட்விட்டர் வாசிகள்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக எண்ணிக்கையில் கொரானா வைரஸ் தொற்று கொண்ட நாடாக முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா தான். இதுவரை 4,862,174 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 158,929 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சற்றும் யோசிக்காமல் சில கருத்துக்களை முன்னின்று சொல்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான்.
அதிகளவிலான பாதிப்புகள் கொண்ட நாடுகளின் அதிபர் என்பதால் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து முழுவதுமாக அறிய வேண்டியவர் அவர்தான், இருந்தபோதிலும் பள்ளிகளை திறக்கலாம் என அவர் அழைப்பு விடுத்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் முதலில் உங்களது சொந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்புங்கள் அதன்பின்பு அவருக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்த்துவிட்டு அனுப்புவார்கள், நாட்டு நிலவரம் அறியாமல் நீங்களே இப்படி பேசும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
OPEN THE SCHOOLS!!!
— Donald J. Trump (@realDonaldTrump) August 4, 2020
SEND BARRN FIRST!!!!#BarronFirst https://t.co/9Oh8B5gOhO
— Bishop Talbert Swan (@TalbertSwan) August 4, 2020
SEND YOUR KID FIRST AND MAKE EVERYONE ATTEND YOUR RNC HATE RALLY! pic.twitter.com/Ie1XNkNf8a
— Lesley Abravanel???? (@lesleyabravanel) August 4, 2020