Twitter Killer: பழகி, பழகி 9 பேரை கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை நட்பு வலையில் சிக்க வைத்து, உடலை துண்டு துண்டாக வெட்டிய ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை விதிப்பு.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகருக்கு அருகில் சாமா எனுமிடத்தை சேர்ந்த 30 வயதான தகாஹிரோ ஷிரைசி என்பவர் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை எண்ணம் பற்றி டுவிட்டரில் பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து, தானும் அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள தயார் எனக் கூறி நட்பு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவர்களை தனது வீட்டுக்கு அழைத்து, அவர்களை கொலை செய்து உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விடுவார் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை நட்பு வலையில் சிக்க வைத்து, உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்களை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒருவர் தனது தங்கையின் டுவிட்டர் கணக்கை ஆய்வு செய்யும் போது, ஒருவரின் ட்விட்டர் மெசேஜ் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில், தற்கொலை செய்ய வேண்டுமா என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த நபர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல்துறை உடனடியாக தகாஹிரோ ஷிரைசி வீட்டை கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அப்போது மனித உடல் உறுப்புகளைக் போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பின்பு, மற்ற தலைகள் மற்றும் உடல் உறுப்புகளை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். பின்னர் ஷிரைசி கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஷிரைசியும் 9 பேரை கொலை செய்தததை ஒப்புக் கொண்டார். அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, தகாஹிரோ ஷிரைசி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், இவர் கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதத்துடன் தான் கொலை செய்து இருக்கிறார். இதனால் அதற்கு ஏற்றார் போல் தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், அந்த கொலையாளி ஷிரைசியே, கொலை செய்யப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஷிரைசிக்கு மரண தண்டனை விதிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகம், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதை டுவிட்டர் பயனர்கள் ஊக்குவிக்கக் கூடாது என ஒரு புதிய விதியை கொண்டு வந்தது.
ஷிராசி தனது வழக்கு விசாரணைக்கு முன்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். ஜப்பானில் மிகச் சமீபத்திய மரணதண்டனை ஒரு வருடம் முன்பு நடந்தது. தூக்கிலிடப்பட்டவர் 2003 ல் தென்மேற்கு ஜப்பானில் ஒரு குடும்பத்தில் நான்கு உறுப்பினர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சீன மனிதர் ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)
INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!
February 11, 2025![India vs England 3rd ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/India-vs-England-3rd-ODI-.webp)