ஜப்பானில் “ட்விட்டர் கொலையாளிக்கு” மரண தண்டனை விதிக்கப்பட்டது …!

Default Image

ஜப்பானில் டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் இன்று ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தது.

என்ன விஷயம்..?

தகாஹிரோ என்பவர் 15 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதை அறிந்து தகாஹிரோ தனது ட்விட்டரைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்பு கொண்ட பிறகு, உங்களுக்கும் தற்கொலை எண்ணங்கள் உள்ளதா..? தற்கொலைக்கு நான் உங்களுக்கு உதவுகிறேன் அல்லது இரண்டு பெரும் சேர்ந்து இறக்கலாம் என்று கூறுவார். பின்னர், அவர் சம்பந்தப்பட்ட இளைஞர்களை தனது வீட்டிற்கு அழைத்து கொலை செய்வார்.

பிறகு சடலங்கள் துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுவார். இந்த வழக்குகள் அனைத்தும் 2107 ஆம் ஆண்டு நடைபெற்றது.

வழக்கு எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தது..?

டோக்கியோவில் 23 வயது பெண் காணாமல் போனதாக கடந்த 2017 அக்டோபரில் போலீசார் தகாஹிரோ வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் பல உடல்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், நடத்திய விசாரணையில் தகாஹிரோ இதுபோன்ற 9 கொலைகளைச் செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்டனை:

குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்து கொலைகளையும் தானாக முன்வந்து செய்தாரா..? அல்லது இறந்தவர் அத்தகைய கோரிக்கையை முன்வைத்தாரா..? என்று நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் 9 கொலைகளை தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு 16 பேர் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது, ஆனாலும் 435 பேர் தீர்ப்பைக் காண வந்ததாக கூறப்படுகிறது. ஒன்பது இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருப்பது மிகவும் கடுமையானது என்று நீதிபதி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்