டிவிட்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் எலான் மஸ்க் கடும் வாதம்… 44 பில்லியன் டாலர் விவகாரம்.!
எலான் மஸ்க், டிவிட்டர் மீது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து 164 பக்க டாகுமெண்ட்-ஐ தாக்கல் செய்துள்ளனர்.
கருத்துக்கள் கூறுவதற்கு உலக மக்களால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதங்களில் முக்கியமானது டிவிட்டர் தளம் .
இந்த தளத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
ஆனால், சில முக்கிய விவரங்களை டிவிட்டர் தரப்பு தர மறுத்ததாகவும், அதனால் எலான் மஸ்க் , டிவிட்டர் வாங்கும் முடிவை தள்ளிவைத்ததாகவும் தகவல் வெளியாகின
இதனால், டிவிட்டர் நிர்வாகம் , எலான் மஸ்க் கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு விசாரணை நடைபெற்று வரும்நிலையில்,
தற்போது எலான் மஸ்க், டிவிட்டர் மீது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து 164 பக்க டாகுமெண்ட்-ஐ தாக்கல் செய்துள்ளனர். அது நீதிமன்ற சீக்ரெட் என்பதால் அதில் என்ன கூறியிருக்கிறார்கள் என வெளியில் தெரியவில்லை.
ஏற்கனவே , டிவிட்டர் நிர்வாகம் மஸ்க் மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளளது. அதாவது டிவிட்டர் நிர்வாகத்தை மஸ்க் வாங்காமல் கைவிட்டதன் காரணமாக டிவிட்டர் பங்குகள் குறைந்து போனதையும் சுட்டிக்காட்டியுள்ளது.