கொரோனா தடுப்பு பணிக்கு 1 பில்லியன் நிதி வழங்கிய ட்விட்டர் இணை நிறுவுனர்.!
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு இன்னும் சரியான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தரவும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலரும் அவர்களது நிதிகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டியுள்ளார். அதில், சர்வதேச கொரோனா நிதிக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஸ்கொயர் நிறுவனத்தில் தனக்கு இருக்கும் தனது பங்குகளை ஸ்மார்ட்ஸ்மால் எல்.எல்.சிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் இது அவரது சொத்து மதிப்பில் 28 சதவீதம் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா முடிந்த பின்னர், பெண்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இந்த செயல் மற்றவர்களுக்கும் நன்கொடை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என நம்புகிறேன். மேலும் தம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வாழ்க்கை மிகவும் சிறியது என்று தெரிவித்துள்ளார்.
I’m moving $1B of my Square equity (~28% of my wealth) to #startsmall LLC to fund global COVID-19 relief. After we disarm this pandemic, the focus will shift to girl’s health and education, and UBI. It will operate transparently, all flows tracked here: https://t.co/hVkUczDQmz
— jack (@jack) April 7, 2020