இந்தியாவிற்கு ட்விட்டர் 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துவிட்டதாக தெரிகிறது. காரணம் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் 3.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர்மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலைமை சிறிது காலம் தொடர்ந்தால், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுபுறம் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமை அதிகாரித்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பல நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவுக்கு நிதி உதவி அறிவித்துள்ளன. ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள் போன்றவை வழங்கி வருகின்றனர். கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு நிதி உதவி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான உபகரணங்களை அறிவித்துள்ளன.
இந்த பட்டியலில் மைக்ரோ பிளாக்கிங் நிறுவனமான ட்விட்டர் 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ. 110 கோடிக்கு மேல் இருக்கும். இந்த தொகை இந்தியா கொரோனா நெருக்கடியிலிருந்து மீள உதவும் என்று அவர் கூறினார்.
இந்த தொகையை கேர்(CARE) 10 மில்லியன் டாலரையும், எய்டு இந்தியா (Aid India) சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா(Sewa International USA) ஆகிய நிறுவனங்களுக்கு தலா 2.5 மில்லியன் டாலர் நன்கொடையாக நிறுவனங்களுக்கு வழங்கியதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…