24 லட்சத்திற்கு விலை போன டிவிட்டர் கணக்குகள்… வெளியான அதிர்ச்சி தகவல்…
54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளைஞர் முதல் பெரியவர்கள் வரை, சினிமா பிரபலங்கள் முதல் பெரிய பெரிய அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் வரையில், பலரும், ஒரு செய்தியை, தங்களது கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் சமூக வலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான்.
இப்படி இருக்க, சமீப காலமாக ஹேக்கர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் நடந்து வருகிறது. அப்படி தான் அண்மையில், 54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு,
அதனை 30,000 அமெரிக்க டாலர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இந்த 54 லட்சத்தில் பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட மற்ற பயனர்கள் பற்றிய தகவல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
போன் நம்பர் அல்லது மின்னஞ்சலை வைத்து டிவிட்டர் கணக்குகள் தொடங்கும் போது, அதனை எளிதாக அங்கீகாரம் இல்லாமல் எந்த ட்விட்டர் ஐடியையும் ஹேக்கர்கள் ஹேக் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.