தளபதி-65ல் இணையும் இரட்டையர்கள்.!

தளபதி 65-ல் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் தளபதி படத்தை இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மடோனா செபாஸ்டின் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது தளபதி 65ல் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கேஜிஎஃப், கைதி, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025