மேடம் வெங்காய விலை ரூ.200…!அப்பறம் காத பத்திரமா பாத்துக்கோங்க-ட்விங்கிள்க்கு ரசிகர் அட்வைஸ்

Default Image
  • வெங்காய வடிவில் நடிகரும் கணவரும் ஆகிய அக்சய குமார் பரிசளித்த வெங்காய காதணி
  • வெங்காயம் ரூ.200 மேடம் உங்கள் காதை ஜாக்கரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் நடிகையும், நடிகர் அக்ஷய குமாரின் மனைவியுமான ட்விங்கள் கன்னாவிற்கு ரசிகர் ஒருவர் அட்வைஸ்

நடிகர் அக்சய குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணியை பரிசளித்தார்.இது சமூகவலையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

Image result for twinkle khanna onions

அதற்கு காரணம் இந்த சமயத்தில் தான் நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு எகிரி வருகிறது. மேலும் நாட்டில் வெங்காய பற்றாக்குறையும் ஏற்பட்ட நிலையில் விலையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு இடையில் தான் இந்த பரிசளிப்பு ஆனது நிகழ்ந்தது.

Image result for twinkle khanna onions

வெங்காய விலை உயர்வை விமர்சித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீம்ஸ்க்களை விட அக்சய குமாரின் வெங்காய காதணி அல்டிமேட் என்று சமூகவலையத்தளவாசிகள் சலசலத்து வந்த நிலையில் அக்சய குமாரின் மனைவியும் நடிகையுமான ட்விங்கிள் கன்னா தனது இண்ஸ்டாகிராமில் வெங்காய காதணியை பதிவிட்டு அது பரபரப்பான காதணியானது.

இந்நிலையில் தற்போது அதே காதணியை பற்றி மீண்டும் தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். என் கணவர் அளித்த பரிசு அது மிகவும் சிறந்த பரிசு அது தற்போது துளிர் விட ஆரம்பித்துள்ளது என்று பதிவிட்டு மேலும் அவர் வெங்காய காதணியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிட்டு உள்ளார்.

Image result for twinkle khanna onions

அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் பதில் அளித்து பதிவிட்டு உள்ளார் அதில் மேடம் வெங்காயத்தின் விலை ரூ.200 காதுகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.மேலும் ஒரு ரசிகர் அது உங்கள் காதுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.,மற்றொரும் ஒரு ரசிகர் ஹ ஹ ஹ விலைமதிப்பற்ற  ட்விங்கிள் ஜி என்று கூறியுள்ளார்.ட்விங்கிள் கன்னாவும் பதிவும் ரசிகர்களின் பதிலும் சமூகவலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்