ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் 9 குழந்தைகள் உட்பட 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
புனித ரமலான் மாதம் ஆரம்பமானதை முன்னிட்டு ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.இதனால்,இந்த கட்டுபாடுகளை எதிர்த்து முஸ்லீம் மற்றும் யூத அமைப்பினர் வெள்ளிக்கிழமையன்று ஆர்பாட்டங்கள் நடத்தினர்.
இதனையடுத்து,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே கலவரங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில்,திங்கள்கிழமையான நேற்று மீண்டும் பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.அதில் 7 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இருப்பினும்,இந்த மோதலில் 21 காவல்துறையினர் காயமடைந்ததாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைகளுக்கு மத்தியில்,ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் ஜெருசலேமில் ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் நேற்றிரவு காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதனையடுத்து,இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஜெருசலேமில் தொடர்ந்து அதிகரித்து வரும் கலவரங்கள் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளது.இந்த ஆலோசனையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து ஐ.நா.எச்சரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…