ஹீரோ ஸ்பிளென்டருக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ள டிவிஎஸ் ரேடியான்.!

Default Image

பட்ஜெட் பைக்குகளின் ராஜாவாக திகழ்கிறது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள். அந்த பைக் மாடலுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது டிவிஎஸ் ரேடியான் பைக்குகள். இதன் டிசைன், தொழில்நுட்பம், விலை என அனைத்தும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை போலவே இருக்கிறது.

இந்த பைக்கில் 109.7 சிசி எஞ்சின், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வரும் இந்த எஞ்சின், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும்.

இந்த எஞ்சின் 8.08 பிஎச்பி பவரையும், 8.7 nm டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பிஎஸ்4 மாடலைவிட சற்றே குறைந்துள்ளது.

இந்த மாடலில் ஒரு வகையான ஸ்டான்டர்டு வேரியண்ட்டானது பியர்ல் ஒயிட், ராயல் பர்ப்புள், கோல்டன் பீஜ், மெட்டல் பிளாக், வல்கனோ ரெட் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய வண்ணங்களிலும், இன்னொரு மாடலான லிமிடேட் எடிசன் மாடலில் க்ரோம் பிரவுன் மற்றும் க்ரோம் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

இந்த பைக்கில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், லக்கேஜ் கேரியர் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும்.

ஸ்டான்டர்டு மாடலின் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். அதேநேரத்தில், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இரண்டு வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல் விரைவில் விற்பனைக்குவரவுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்