பிரபல ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 15’ நிகழ்ச்சியில் பிரதிக் செஹாஜ்பாலை தோற்கடித்த டிவி நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களை அதிகம் கவர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோவான “பிக் பாஸ்” சீசன் 15 இன் வெற்றியாளர் பட்டத்தை தொலைக்காட்சி நட்சத்திரமான தேஜஸ்வி பிரகாஷ்,நடிகரும்-மாடலுமான பிரதிக் செஹாஜ்பாலை வீழ்த்தி தட்டிச் சென்றுள்ளார்.அதன்படி,பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி தொகுப்பாளரான சூப்பர் ஸ்டார் சல்மான் கான்,தேஜஸ்வி பிரகாஷ் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனையடுத்து,தேஜஸ்விக்கு ரூ.40 லட்சம் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் கோப்பையும் வழங்கப்பட்டது.
அதே சமயம்,பிக் பாஸ்” சீசன் 15 இல் செஹாஜ்பால் முதல் ரன்னர் அப் ஆனார். அதுமட்டுமல்லாமல்,வெற்றியாளர் தேஜஸ்வி பிரகாஷின் காதலராக கூறப்படும் கரண் குந்த்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும்,நடிகை ஷமிதா ஷெட்டி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.நடன இயக்குநர் நிஷாந்த் பட் இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் ரூ. 10 லட்சத்தைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,தேஜஸ்வி பிரகாஷ் தனது வெற்றி குறித்து கூறுகையில்:
“நான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது,தொடக்கத்தில் எல்லாம் கனவு போல் இருந்தது.அதன்பின்னர்,நான் விளையாட்டை புரிந்து கொள்ள ஆரம்பித்தவுடன், நான் அதில் முழுமையாக மூழ்கிவிட்டேன்,இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு நம்பமுடியாத பயணமாக உள்ளது.இறுதியாக கோப்பையை வென்றதை மிக யதார்த்தமாக உணர்கிறேன்.எனினும்,நான் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உண்மையான பரிசு என்னவென்றால்,கற்றல் மற்றும் சிறந்த அனுபவங்கள்தான். என்னை நம்பிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…