கொரோனா என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் கைது.! அரசு உத்தரவால் கலக்கத்தில் பொதுமக்கள்!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சில நாடுகளை பாதிக்காமல் இருக்கிறது. அப்படி, இருக்கும் நாடுகளில் ஒன்றான துர்மேனிஸ்தான் அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களை கலக்கத்தில் வைத்துள்ளது.
துர்மேனிஸ்தான் நாட்டிற்கு அருகே இருக்கும் ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இதுவரை ஒருவர் கூட துர்மேனிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
அதனால், அந்நாட்டு அரசு, ‘ கொரோனா என்கிற வார்த்தையை பொது இடங்களில் பயன்படுத்தினால் கைது நடவடிக்கை. எனவும், பத்திரிக்கைகளில் கொரோனா என்கிற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி அணிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் . ‘ எனவும் துர்மேனிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
துர்மேனிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரப்போக்கை கடைபிடிப்பதாக பலர் கூறுகின்றனர். உலகளவில் பத்திரிக்கை சுதந்திரத்தில் துர்மேனிஸ்தான் அரசு கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024