துருக்கி பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும்…ட்ரெம்ப் எச்சரிக்கை …!!
சிரியாவில் குருது படைகளை தாக்கினால் பொருளாதார பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக குருது படையுடன் இணைந்தது அமெரிக்கா சண்டையிட்டு வருகின்றது .ஆனால் துருக்கி அரசு குருது படைகளை பயங்கரவாதிகளாக கருதி பதில் தாக்குதல்களை நடத்தி வந்தது.குருது படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால் ஆத்திரம் அடைந்துள்ள துருக்கி அதிபர் அட்டோகன் தைப் அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிரியாவில் இருந்த அமெரிக்கா படைகளை அமெரிக்கா திருப்ப பெறும் நடவடிக்கையை தொடக்கியுள்ளது.இதனால் துருக்கி அரசு குருது படைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .இதையடுத்து துருக்கி அரசின் இந்த தாக்குதல் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் குருது படைகள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் துருக்கி பொருளாதார ரீதியில் பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.