துருக்கி நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு! 786 பேர் காயம்!
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள, ‘ஏகன்’ தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட பெரிய கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ள, இஸ்மியர் நகரம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 120 பேர் காயமடைந்துள்ளதாகவும், துருக்கி அரசு முதற்கட்ட தகவலை அளித்தது.
இந்நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தகவல் அளித்துள்ளனர்.