609 ஆண்டுகால மசூதியை அப்படியே தூக்கி அருகாட்சியகத்தில் வைத்துவிட்டார்கள்!
- துருக்கி, நாட்டில் பாட்மான் நகரில் புதிய அணை கட்டப்பட உள்ளது.
- அதன் காரணமாக அங்குள்ள பழமையான மசூதி அப்படியே பெயர்த்து எடுத்து தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் பாட்மான் மாகாணத்தில் உள்ளது ஹசன்ஹீப் எனும் இந்த ஊரில், டைக்ரீஸ் ஆற்றிற்கு குறுக்கே ஒரு புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட உடன் டைக்ரீஸ் நதி அணை பகுதியை நோக்கி திருப்பிவிடப்படும்.
அப்படி நதி போகும் இடத்தில எரி ரிஸ்க் எனும் பழமையான மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கட்டப்பட்டு 609 ஆண்டுகள் ஆகிறது. ஆதலால் இந்த மசூதியை இடிக்காமல், அப்படியே பெயர்த்து எடுத்து இரு பாகங்களாக வாகனத்தில் ஏற்றி அதனை 3 கிமீ தொலைவில் உள்ள ஒரு அருகாட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசூதியின் எடை 1700 டன்ஆகும். இந்த மசூதியை ராட்சச வாகனம் மூலம் நகர்த்தி அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.