துருக்கி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு..!

Published by
Sharmi

துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வெள்ளத்தால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர். காஸ்டமோனு பகுதியில் 62 பேரும், சினோப் பகுதியில் 11 பேரும், பார்ட்டின் பகுதியில் 1 நபரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2,440க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு கப்பல்கள் இப்பகுதி மக்களின் உடமைகளை மீட்க அனுப்பப்பட்டுள்ளது.

Published by
Sharmi
Tags: #FloodTurkey

Recent Posts

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

24 mins ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

1 hour ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

3 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

3 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

3 hours ago