திருமண தடைகள் நீங்கி செல்வம் பெருக வீட்டில் ஒரு துளசி செடி போதும்!

Default Image

வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம்.

இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும்.

துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் தான் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் துளசி செடியை அல்லது துளசி மாடத்தை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு மாக்கோலம் இட்டு பூ அலங்காரம் செய்து மணப்பெண் போல அலங்கரித்துக் கொள்ள வேண்டும். துளசி அருகே பகவான் விஷ்ணு புகைப்படமோ அல்லது கிருஷ்ணர் புகைப்படமோ அல்லது ஒரு நெல்லி குச்சி வைத்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடவேண்டும் நெல்லி குச்சியில் பகவான் விஷ்ணு இருப்பதாக ஐதீகம்.

அவ்வாறு வழிபடும்போது நெய்வேத்தியம் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். பிருந்தாவன துவாதசி நாளன்று இந்த பூஜைகள் செய்தால் வீட்டில் சுப காரியம் நடப்பதற்கு தடையாக இருந்த அனைத்து கெட்ட விஷயங்களும் நீங்கும். மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்