ஆர்.கே.நகரில் பொதுமக்கள் தினகரனுக்கு கடும் எதிர்ப்பு ! 20 ரூபாய் டோக்கனுக்கு பணம் எங்கே?குறுக்கு வழியில் தப்பியோடிய தினகரன்!
சில பெண்கள், 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து, ,ஆர்.கே.நகர் சென்ற அத்தொகுதி எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓட்டுக்கான பணம் எங்கே? என்று முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக டிடிவி தினகரன் சென்றார். இதையறிந்து பெண்கள் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு முன் திரண்டனர்.
இடைத்தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட டோக்கனாகக் கூறப்படும் 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்தபடி, அவர்கள் முழக்கமிட்டனர். ஓட்டுக்குக் கொடுப்பதாகச் சொன்ன பத்தாயிரம் ரூபாய் எங்கே என்று கேட்டு அவர்கள் முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அனைவரையும் சமாதானம் செய்தனர். இருப்பினும் தினகரன் செல்லும்போது காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், தண்ணீர் பந்தலை திறந்து வைத்த டிடிவி தினகரன், மாற்றுப் பாதையில் காரில் புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.