நக்கல் செய்வது நடைபிணமாவது உறுதி… குக்கர் கிடைத்தது.. சிக்கல் தீர்ந்தது….
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு , ஆர்.கே சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், அந்த சின்னத்தையே தமது அணிக்கு ஒதுக்கிடும்படி தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது.
தினகரன் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தினையும், அவர் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதேனும் ஒன்றை கட்சிக்கு ஒதுக்கீடு செய்யும்படியும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், “குக்கர் கிடைத்தது ; சிக்கல் தீர்ந்தது. யாருக்கோ விக்கல் என்று கேள்வி. நக்கல் செய்வது நடைபிணமாவது உறுதி” என தினகரன் எதிர்ப்பாளர்கள் குறித்து நக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.