டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை பாதுகாப்பதில் தீவிரம்!உச்சநீதிமன்றத்தில் மனு….
டிடிவி தினகரன் கேவியட் மனு குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் தொடர்பாக தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே, இந்த உத்தரவை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்கக்கோரிக்கைவிடுத்து தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக,தினகரன் சென்னையிலுள்ள தனது இல்லத்தில், ஆதரவாளர்களுடன், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.