இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் ஆஜர்!
டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர ராவ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு இடைத்தரகராக செயல்பட 50 கோடி பேரம் பேசியதாகவும், அதில் முதற்கட்டமாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை வாங்கியதாகவும், இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர ராவ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டி.டி.வி.தினகரனை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரை டெல்லி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர், ஜாமீனில் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு, இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இன்றைய வழக்கு விசாரணையின்போது, டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக, ஏற்கெனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை அடுத்து, இன்று அவர் நேரில் ஆஜராகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.