அடுத்தடுத்த சிக்கலில் “TTF”…..மேலும் 3 பிரிவுகளில் வழக்குபதிவு..! கைது செய்ய வாய்ப்பு…?
யூடியூப் இணையத்தளத்தில் பைக் ரைடு சென்று வீடியோக்களை பதிவிடும் டிடிஎப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்டாக் பிரபல ஜிபி முத்துவை தனது பைக்கில் அமர வைத்து கிட்டத்தட்ட 160 கீ.மீ வேகத்தில் சென்று அதற்கான வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, வாகனத்தில் அதிவேக பயணம் செய்த யூடியூபர் டி.டி.எப் வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து கோவை மாநகர காவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிடிஎப் வாசன் என்ற நபர் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அவரது இருசக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு எம்.டி.எஸ். பேக்கரி அருகே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்றுள்ளார்.
மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக போத்தனூர் காவல் நிலையத்தில் 279 ஐ.பி.சி, 184 எம்வி ஆக்டில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்- அணு அணுவாய் கவர்ச்சியில் ரசிகர்களை கொள்ளும் அனு இமானுவேல்.! அந்த உடையில் அசத்தல் க்ளிக்ஸ்.!
மேலும் ஏற்கனவே அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் ஐபிசி 279 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது வாசன் மீது சூலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் டிடிஎப் வாசன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.