ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோன்ஷு அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று ஜப்பானின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை (21 நிலநடுக்கங்கள்) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில், ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வர தொடங்கியது என பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயர சுனாமி பதிவாகியுள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடற்கரையோர பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்க தொடங்கி உள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஜப்பானை தொடர்ந்து, வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கி வரும் நிலையில் தற்போது வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024