ஏடிஎம்மில் பணம் திருட முயற்சி !
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடமுயன்றது தெரிய வந்துள்ளது.
காந்திஜி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் மையம் முறையாக செயல்படவில்லை. இதனால் அங்கு வந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர் எணிக்கை குறைவாக இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் அந்த ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம் கார்டு பொருத்தும் இடத்தில் சந்தேகப்படும் படியாக மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்தில் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் ரகசிய சிப் பொருத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை திருட முயற்சித்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.சமிப காலங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் திருடுவது அதிகமாக நடைபெறுகின்றது.