மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட்.
அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்ட மோதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரபலமான டிக் டாக் செயலியை தடை செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில், டிக்டாக்கை வாங்க முயற்சித்துவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான வால்மார்ட், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டிக்டாக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிற நிலையில், இரண்டு பெரு நிறுவனங்கள் இணைந்து டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க முயற்சிப்பதால், இந்த ஒப்பந்தம் வெற்றியடையலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…