டிக்டாக்கை வாங்க முயற்சி! மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட்!

Default Image

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட்.

அமெரிக்கா – சீனா இடையே  ஏற்பட்ட மோதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரபலமான டிக் டாக் செயலியை தடை செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட், டுவிட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில், டிக்டாக்கை வாங்க முயற்சித்துவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான வால்மார்ட், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டிக்டாக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிற நிலையில், இரண்டு பெரு நிறுவனங்கள் இணைந்து டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க முயற்சிப்பதால், இந்த ஒப்பந்தம் வெற்றியடையலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai
Tamilnadu CM MK Stalin - PMK Leader Dr Ramadoss