காலிஃப்ளவர் 65 வீட்டில் இனி இப்படி செய்து பாருங்கள்!
வீட்டிலேயே எப்படி அட்டகாசமாக காலிஃப்ளவர் 65 செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- காலிஃப்ளவர்
- கடலைமாவு
- சோளமாவு
- கருவேப்பில்லை
- உப்பு
- சீரகம்
செய்முறை
முதலில் அடுப்பில் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் பூவில் ஊற்றவும். ஒரு 10 நிமிடம் ஊறவைத்துவிட்டு வடிகட்டவும். அப்பொழுது தான் அந்த பூவில் ஏதேனும் புழுக்கள் இருந்தாலும் சுத்தமாகும்.
பின் அந்த வடித்துவைத்துள்ள பூவுடன் காலை மாவு, சோலா மாவு பொரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய பொடி, லேசாக உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலக்கி 5 நிமிடம் ஊறவைத்துவிட்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து நன்றாக பொரிக்கவும். வீட்டிலேயே அட்டகாசமான காலிஃப்ளவர் 65 தயார்.