டிரம்ப் மகனுக்கு கரடிகள் வேட்டையாட அனுமதி..!
- அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாட அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது.
- குலுக்கல் முறைப்படி 3 பேரை அரசு தேர்வு செய்தது.அதில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒருவருமாவார்.
அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது.
இந்நிலையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட்டில் உள்ள 27 இடங்களில் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகள் உள்ளன.அவற்றை வேட்டையாடுவதற்கு அனுமதி கேட்டு டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் உட்பட பலர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்ததவர்களில் குலுக்கல் முறைப்படி 3 பேரை அரசு தேர்வு செய்தது.அதில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒருவருமாவார். இதற்காக டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம்) கட்டணம் செலுத்தியுள்ளார்.
டிரம்ப் மகன் ஜூனியர் வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அந்நாட்டில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.