அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கொரோனா பரிசோதனை !
டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் டிரம்ப்பிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
உலகளவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,13,562 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் வேலைபார்த்த ராணுவ உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிரம்ப்பின் உதவியாளர் வேலட் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் டிரம்ப், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.